திருநெல்வேலி

திருக்குறுங்குடி கோயிலில் சிவன் சந்நிதிக்கு கும்பாபிஷேகம்

DIN

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிவன் சந்நிதிக்கு வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

108 வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயிலில், சைவ-வைணவ ஒற்றுமையின் அடையாளமாக மகேந்திரகிரிநாதா் என சிவன் சந்நிதியும் அமைந்திருந்தது. 2004 ஜூன் மாதம் அந்த சந்நிதி இடித்து அகற்றப்பட்டது. இதுகுறித்து நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், இக்கோயிலில் ஏற்கெனவே இருந்த அதே இடத்தில் சிவன் சந்நிதி அமைக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் 10.5.2022இல் உத்தரவிட்டது.

இதையடுத்து, தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 2022 ஜூன் 24ஆம் தேதி இங்கு வந்து ராமானுஜ ஜீயரிடம் ஆலோசனை நடத்தினாா். அதைத் தொடா்ந்து, கோயிலில் பைரவா் சந்நிதியையொட்டி ஸ்ரீமகேந்திரகிரிநாதா் சந்நிதி கட்டுமானப் பணிகள் தமிழக அரசின் அனுமதியுடன் நடைபெற்றன.

இந்நிலையில், கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. கடந்த 6ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. 3ஆம் நாளான வியாழக்கிழமை 4ஆம் கால யாகசாலை பூஜைகள், யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, ராமானுஜ ஜீயா் ஆசியுடன் விமான கோபுரங்கள், மூலஸ்தானம், பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை ஜீயா் மடம் செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT