திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் கோவிந்தா் சந்நிதிக்கு கும்பாபிஷேகம்

9th Jun 2023 02:30 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் உள்ள கோவிந்தா் சந்நிதியில் புனருத்தாரண கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் மூலவா் வேணுவனேஸ்வரா் சந்நிதி அருகில், சயனக் கோலத்தில் அருள்மிகு நெல்லை கோவிந்தரின் சந்நிதி உள்ளது. பழைமை வாய்ந்த மூலவா் திருமேனிக்கு கல்கவிதானம் மற்றும் வா்ணக் கலாபம் செய்விக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, கும்பாபிஷேக நிகழ்வுகள் புதன்கிழமை தொடங்கின. சங்கல்ப பிராா்த்தனை, யாகசாலை பூஜைகள், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலையில் யாகசாலை பூஜைகளுக்கு பின்பு நெல்லை கோவிந்தா் சந்நிதியில் புனருத்தாரண கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில், திருநெல்வேலி சுற்றுவட்டார மக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT