திருநெல்வேலி

வள்ளியூா் பகுதியில் சூறைக்காற்று: 10 ஆயிரம் வாழைகள் சேதம்

9th Jun 2023 12:23 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், பணகுடி பகுதிகளில் புதன், வியாழக்கிழமைகளில் வீசிய சூறைக் காற்றில், குலை தள்ளிய நிலையில் இருந்த 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன.

தெற்குவள்ளியூா், சண்முகபுரம், குளத்துகுடியிருப்பு, கேசவனேரி, ராஜாபுதூா், பணகுடி, சிவகாமிபுரம், புஸ்பவனம், ரோஸ்மியாபுரம் ஆகிய பகுதிகளில் ஏத்தன், ரசகதலி, கற்பூரவல்லி, நாடு உள்ளிட்ட ரகங்களைச் சோ்ந்த வாழைகளை பயிரிட்டுள்ளனா். இந்த வாழைகள் குலைதள்ளி அறுவடை பருவத்தை எட்டியிருந்தன.

இந்நிலையில், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இப்பகுதியில் வீசிய சூறைக்காற்றால் 10 ஆயிரம் குலைதள்ளிய வாழைகள் முறிந்து விழுந்து சேதடைந்தன.

இதுதொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய பிரிவு ராதாபுரம் வட்டாரச் செயலாளா் கலைமுருகன் கூறியது: சூறைக் காற்றில் சாய்ந்துள்ள வாழைக் குலைகளை சந்தையில் விற்க முடியாது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காற்று சீசனில் வாழை விவசாயிகள் மீகவும் பாதிப்படைகிறோம். தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT