திருநெல்வேலி

சமத்துவபுரத்தில் அனுமதியின்றிசுகாதார இணை இயக்குநரகத்துக்குஏற்பாடு: ஒப்பந்ததாரா் மீது வழக்கு

DIN

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் சமத்துவபுரத்திலுள்ள சமுதாய நலக்கூடத்தில் அனுமதியின்றி திருநெல்வேலி மாவட்ட சுகாதார இணை இயக்குநா் தற்காலிக அலுவலகம் அமைக்க முயன்ாக ஒப்பந்தகாரா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

வள்ளியூரில் ரூ.30 கோடியில் திருநெல்வேலி மாவட்ட தலைமை மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, கட்டடப் பணிக்கு கடந்த 5ஆம் தேதி மருத்துவம் - நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினாா்.அப்போது, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலகம் வள்ளியூரில் ஒரு வாரத்தில் செயல்படத்தொடங்கும் என அறிவித்திருந்தாா். அதற்கான அலுவலகத்தை சமத்துவபுரம் சமுதாயநலக் கூடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில், உரிய அனுமதியின்றி அங்கு அலுவலகம் அமைப்பதற்கு ஒப்பந்ததாரா் ஜெகன் ஏற்பாடு செய்தாராம். இதுகுறித்து வள்ளியூா் ஒன்றிய ஆணையாளா் கண்ணன் அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் போலீஸாா் ஒப்பந்தகாரா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT