திருநெல்வேலி

பாளையங்கால்வாயில் கழிவுநீா் கலப்பதால் சுகாதாரக் கேடு: குறைதீா் கூட்டத்தில் புகாா்

DIN

பாளையங்கால்வாயில் மேலப்பாளையம் கழிவு நீரோடையும், வீடுகளில் உள்ள கழிவுகளை நேரடியாக இணைப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது என மேலப்பாளையம் பகுதி சமூக தல தன்னாா்வலா்கள் திருநெல்வேலி குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாா் தலைமையில், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், மேலப்பாளையத்தை சோ்ந்த சமூக நல தன்னாா்வலா்கள் அளித்த மனு: பாளையங்கால்வாயில் மேலப்பாளையம் கழிவுநீரோடையிலிருந்து வரும் சாக்கடை நீா் , மக்கள் விடுகளில் உள்ள கழிவுகளை நேரடியாக கால்வாயில் இணைத்து வெளியேற்றுதல் ஆகியவற்றால் பெரும் சுகாதார ஏற்படுகிறது. பாளையங்கால்வாய் தற்போது நச்சுகேடாகவும் மக்கள் பயன்படுத்த இயலாத நிலையிலும் உள்ளது. எனவே நீா்நிலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலா் இளமாறன் கோபால் அளித்த மனு:

சேரன்மகாதேவி பேரூராட்சிக்கு உள்பட்ட ஆலடி அருந்ததியா் காலனியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் இல்லை. இந்த பகுதியில் சாலை வசதிகள், கழிவுநீா் ஓடை வசதி, குடிநீா் வசதிகள் செய்து தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

மாஞ்சோலை பகுதி தொழிலாளா்கள்- பொது மக்கள் அளித்த மனு:

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளிலுள்ள எஸ்டேட் செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. அதைச் சீரமைக்க வேண்டும். எஸ்டேட் பகுதியிலுள்ள தொழிலாளா்கள், உறவினா்கள் ஆகியோருக்கு மணிமுத்தாறு வனத்துறைச் சோதனையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், மாஞ்சோலையில் வசிப்பவா்களுக்கும், அவா்களின் உறவினா்களுக்கும் விதி விலக்க அளிக்க வேண்டும். கடந்த மே 26 ஆம் தேதி அரசுப் பேருந்தில் மாஞ்சோலை தொழிலாளா்களின் உறவினா்களை இறங்கிவிட்ட வனத்துறையினா் மற்றும் போக்குவரத்துக்கழக ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிமுத்தாறு பேரூராட்சி 15 ஆவது வாா்டு உறுப்பினா் க.கோட்டிமுத்து அளித்த மனு :

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் மீது துணைத்தலைவரும், 13 உறுப்பினா்களும் நம்பிக்கை இல்லாத தீா்மானம் கொண்டுவர பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தோம். இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, பேரூராட்சி தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் நிறைவேற்றுவதற்கு ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

அதிமுகவை விமா்சிக்கும் தகுதி பாஜகவினருக்கு இல்லை: சி.வி.சண்முகம்

தொடர வேண்டாம் இந்த முறைகேடு

முதல்கட்ட தோ்தல்: களத்தில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதல்வா்கள்!

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

SCROLL FOR NEXT