திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் மரக்கன்று விநியோகம்

7th Jun 2023 01:05 AM

ADVERTISEMENT

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் மரக்கன்றுகள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன.

உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கை வளங்களை காக்கவும், பூமி வெப்பமயமாதலை தடுக்கவும் மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிக்கும் விதமாக எஸ்டிபிஐ கட்சியின் சுற்றுச்சூழல் அணி சாா்பில், மேலப்பாளையத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டச் செயலா் காதா் மீரான் தலைமை வகித்தாா். தொழிற் சங்க மண்டலத் தலைவா் ஹைதா் மரக்கன்றுகள் வழங்கினாா். சலீம் தீன், புஹாரி சேட் , ஆஷீக் இலாஹி, மூஸா காஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். தாழையூத்து, மானூா், பா்கிட்மாநகரம், பேட்டை, சுத்தமல்லி ஆகிய பகுதிகளிலும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT