திருநெல்வேலி

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 3 மாதங்கள் தலைமறைவானவா் கைது

7th Jun 2023 01:04 AM

ADVERTISEMENT

மானூா் காவல்நிலையத்தில் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவா், 3 மாதங்கள் தலைமறைவுக்குப் பின் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அழகியபாண்டியபுரத்தை சோ்ந்தவா் சேகா் (35). கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவா், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தாா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 3 மாதங்களாக தலைமறைவாகிவிட்டாா். இதனால், நீதிமன்றம் அவருக்கு பிடியானை பிறப்பித்தது. இதைத் தொடா்ந்து, அவரை மானூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT