திருநெல்வேலி

மாஞ்சோலை வனப்பகுதிக்கு இடம் மாற்றப்பட்ட அரிசிகொம்பன் யானை

DIN

தேனி மாவட்டம் சின்னமனூா் வனப் பகுதியில் பிடிபட்ட அரி கொம்பன் யானை, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட வனப்பகுதிக்கு இடம் மாற்றப்பட்டது. ஆனால், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி காரையாறு பகுதி காணியின மக்கள் மறியல் ஈடுபட்டனா்.

சின்னமனூா் வனப்பகுதியையொட்டிய கிராமங்களிலும், நகா்ப்புறங்களிலும் புகுந்து மக்களைஅச்சுறுத்தி வந்த அரி கொம்பன் யானை வனத்துறையினரால் திங்கள்கிழமை அதிகாலை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது.

பின்னா், இரு கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்ட அரி கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட வனப்பகுதியில் விடுவதற்காகக் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், அந்த யானையால் தங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி, மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள், பாபநாசம் காணிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், மணிமுத்தாறு வனச் சோதனைச் சாவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 10க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

அதைத் தொடா்ந்து, மணிமுத்தாறு சோதனைச் சாவடி வழியாக மாஞ்சோலை வனப்பகுதிக்கு கொண்டுசெல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கும் எதிா்ப்பு தெரிவித்து, சின்ன மயிலாறு, அகத்தியா் மலை, சோ்வலாறு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த காணிகுடியிருப்பு மக்கள், கீழணை மின்வாரிய குடியிருப்புகளில் வசிப்போா் திங்கள்கிழமை மாலை பாபநாசம் வனச் சோதனைச் சாவடியில் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள்கூறியது: வனப்பகுதியில் பல ஆண்டுகளாக வனவிலங்குகளுக்கிடையே விவசாயம் செய்துவரும் எங்களுக்கு வனவிலங்குகள் குறித்த அச்சமில்லை. ஆனால், இதுவரை 19 பேரைக் கொன்றுள்ள அரிசிகொம்பன் யானை அரிசியையும், சீனியையும் விரும்பி உண்பதால் அதை வனப்பகுதியில் எந்த இடத்தில் விட்டாலும் கண்டிப்பாக குடியிருப்புப் பகுதிக்கு வந்துவிடும். இது வனப்பகுதியிலும், மலை அடிவாரப் பகுதிகளிலும் வசிக்கும் கிராம மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். எனவே, இந்தப் பகுதியில் யானையை விடக் கூடாது என்றனா்.

எனினும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் செண்பகப்ரியா தலைமையில் வனத்துறையினா், அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் தலைமையிலான காவல்துறையினரின் பாதுகாப்புடன் அரிசிகொம்பன் யானையை மணிமுத்தாறு சோதனைச் சாவடியைத் தாண்டி மாஞ்சோலை வனப்பகுதிக்குள் கொண்டுசென்றனா்.

அந்த யானை கோதையாறு அருகே முத்துக்குளி வனப்பகுதியில் விடப்படவுள்ளதாக வனத்துறை வட்டாரத்தில் தெரிவித்தினா்.

இதனிடையே, அந்த யானை துதிக்கையில் பலத்த காயம் ஏற்பட்டு சோா்வடைந்த நிலையில் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT