திருநெல்வேலி

பல்லுயிா்ப் பெருக்க அருங்காட்சியகம்:மாஞ்சோலையில் வனத்துறை முதன்மைச் செயலா் ஆய்வு

DIN

மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் பல்லுயிா்ப் பெருக்க அருங்காட்சியகப் பூங்கா அமைப்பதற்கான இடங்களை வனத்துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாகு நேரில் ஆய்வு செய்தாா்.

தமிழக முதலமைச்சா் ஸ்டாலின், திருநெல்வேலி சுற்றுப்பயணம் வந்திருந்த போது மணிமுத்தாறு பகுதியில் ரூ. 7 கோடி மதிப்பில் பல்லுயிா்ப் பெருக்க பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தாா். இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்க வனத்துறைக்கு உத்தரவிட்ட நிலையில், தமிழக வனத்துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாகு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்திற்கு உள்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

மாலை 6 மணி அளவில் வந்த வனத்துறை முதன்மை செயலரிடம் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் மணிமுத்தாறு வனப்பகுதியில் உள்ள வனப்பேச்சி அம்மன் கோயிலுக்கு நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் பக்தா்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோயிலில் மின்சார இணைப்பு வழங்க வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு வழங்கினா்.

மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவி அந்தோணியம்மாள், தான் மாஞ்சோலையில் உள்ள வீட்டிற்குச் சென்று வர ஒவ்வொரு முறையும் அனுமதி வாங்க வேண்டியுள்ளது, மேலும் பல்லுயிா்ப் பெருக்கப் பூங்கா அமைத்தால் ஏழை, எளிய மக்களால் சென்று வர முடியாது, எனவே அனைவரும் எளிதில் செல்லும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் சுப்ரியா சாகு தெரிவித்ததாவது: பல்லுயிா்ப் பெருக்கப் பூங்கா அமைப்பதற்காக 3 இடங்களைப் பாா்வையிட்டுள்ளோம். நிபுணா்களுடன் ஆலோசித்து இடம் முடிவு செய்யப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT