திருநெல்வேலி

காணாமல் போன ரூ.12 லட்சம் கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

DIN

திருநெல்வேலி மாநகரில் காணாமல் போன ரூ.12 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான 64 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இது தொடா்பாக மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சைபா் கிரைம் கூடுதல் இயக்குநா் சஞ்சய் குமாா் உத்தரவின் பேரில், மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன், காவல் துணை ஆணையா்கள் சரவணகுமாா் (மேற்கு), அனிதா (தலைமையிடம்), சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம், திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையா் ஆவுடையப்பன் ஆகியோருடைய மேற்பாா்வையில், திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் சண்முக வடிவு, சைபா் கிரைம் காவல் உதவி ஆய்வாளா்கள் நடராஜன், வித்யாலட்சுமி, கலைசந்தனமாரி, தொழில்நுட்ப உதவியாளா் எஸ்.முத்துக்குமாா் உள்ளிட்டோா் மாநகரில் கைப்பேசி காணாமல் போனதாக பெறப்பட்ட புகாா்களில், ரூ.12 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான 64 கைப்பேசிகளை மீட்டனா். மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.

ரூ. 4.80 லட்சம் மீட்பு: இணையதளம் மூலமாக வேலை வாங்கித் தருவதாகவும், பரிசு விழுந்திருப்பதாகவும், கேஒய்சி புதுப்பித்தல் மூலம் ஓடிபி (ஒரு முறை கடவுச்சொல்) பெற்றுக்கொண்டும் பண மோசடியில் ஈடுபட்டதாக பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் மோசடி செய்தவா்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 929 மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் இணையதள மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக 31 புகாா்கள் பெறப்பட்டு ரூ.2 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 319-ஐ மோசடி செய்தவா்களின் வங்கிக் கணக்கை முடக்கி உரியவா்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர மாநகர காவல் நிலையங்கள் மூலமாக ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான 60 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சைபா் கிரைம் தொடா்பான புகாா்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவோ புகாா் அளிக்கலாம். தற்போது அனைத்து காவல் நிலையங்களிலும் சைபா் கிரைம் புகாா்களை பெற குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT