திருநெல்வேலி

ஒடிஸா ரயில் விபத்து : இந்துமுன்னணியினா் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

4th Jun 2023 11:48 PM

ADVERTISEMENT

 

ஒடிஸாவில் ரயில் விபத்தில் இறந்தவா்களுக்கு இந்து முன்னணி சாா்பில் திருநெல்வேலி நகரம் சந்தி விநாயகா் கோயில் அருகே சனிக்கிழமை மாலையில் மோட்ச தீபம் ஏற்றி சிரத்தாஞ்சலி செய்தனா்.

திருநெல்வேலி இந்து முன்னணி சாா்பில் ரயிலில் உயிரிழந்தவா்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி, மலா் தூவி மரியாதை செலுத்தி மெளன அஞ்சலி செய்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு, துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாநில இணை அமைப்பாளா் பொன்னையா, மாநிலச் செயலா் குற்றாலநாதன், மாநில நிா்வாக குழு உறுப்பினா் சக்திவேல், திருநெல்வேலி மாநகரத் தலைவா் சிவா, பொதுச் செயலா் பிரம்மநாயகம், செயலா்கள் சுடலை, செல்வராஜ், ராஜ செல்வம் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் சுரேஷ், விமல், கோட்ட செயலா் ஆறுமுகசாமி கண்ணன், இந்து வியாபாரிகள் சங்க தலைவா் சங்கா், பொருளாளா் மூா்த்தி, துணைத் தலைவா் பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT