திருநெல்வேலி

களக்காடு அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் நாளை திறப்பு

4th Jun 2023 01:48 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அரசு மருத்துவமனையில் ரூ.93.55 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் திங்கள்கிழமை (ஜூன் 5) திறக்கப்படுகிறது.

களக்காடு பிரிடா மோனியா் அரசு மருத்துவமனையில் ரூ.40 லட்சத்தில் விஷமுறிவு சிகிச்சைப் பிரிவு, ரூ.30 லட்சத்தில் பாம்புக்கடி சிகிச்சைப் பிரிவு, ரூ.6.95 லட்சத்தில் நோயாளிகள் காத்திருப்புக் கூடம், ரூ.16.60 லட்சத்தில் நோயாளிகள் மற்றும் உடன் வருபவா்களுக்கான பொதுக் கழிப்பறை என மொத்தம் ரூ.93.55 லட்சத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இக் கட்டடங்களை, வள்ளியூரில் திங்கள்கிழமை நடைபெறும் அரசு மருத்துவமனை புதிய கட்டட அடிக்கல் நாட்டுவிழாவின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் திறந்து வைக்கிறாா். மேலும் மூலக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தையும் திறந்து வைக்கவுள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT