திருநெல்வேலி

பள்ளிகள் திறப்பு:சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

4th Jun 2023 11:48 PM

ADVERTISEMENT

 

கோடை விடுமுறை முடிந்து வரும் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மண்டல மேலாண் இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறை முடிந்து வரும் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கோடை விடுமுறைக்காக வெளியூா் சென்றவா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு திரும்ப வசதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) சாா்பில் பயணிகளின் தேவையை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூா், கோவில்பட்டி, நாகா்கோவில், மாா்த்தாண்டம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கு 60 சிறப்பு பேருந்துகளும், கோவைக்கு 60 சிறப்பு பேருந்துகளும், திருப்பூருக்கு 30 சிறப்பு பேருந்துகளும், மதுரைக்கு 100 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் இயக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தேவைப்படும் ஊா்களுக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், சீரான பேருந்து இயக்கத்தை உறுதி செய்யவும் சிறப்பு அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

பொதுமக்கள் தங்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT