திருநெல்வேலி

பாபநாசம் தாமிரவருணியில் சிறப்பு ஆரத்தி வழிபாடு

4th Jun 2023 01:47 AM

ADVERTISEMENT

 

பாபநாசத்தில் சித்தா்கள் கோட்டம் சாா்பில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு தாமிரவருணி அவதார திருவிழா சிறப்பு ஆரத்தி நடைபெற்றது.

விக்கிரமசிங்கபுரம், டாணா, வள்ளலாா் வழிபாட்டு மன்றத்தினரின் அருட்பெருஞ்சோதி அகவல் பாராயணம், மழை வேண்டி பஞ்சபூத வழிபாடு, திருமுறை விண்ணப்பம், கோ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து தாமிரவருணி அன்னைக்கு சிறப்பு தீப ஆரத்தி நடை பெற்றது.

நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா இன்டா்நேஷனல் தலைவா் செந்தூா்பாரி, பொருளாளா் சுப்பிரமணியன், அறங்காவலா் காசி மோகனசுந்தரம், விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ் பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சித்தா்கள் கோட்டம், தாமிரவருணி ஆரத்திக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT