திருநெல்வேலி

வள்ளியூா் பேருந்து நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

4th Jun 2023 11:48 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பேருந்துநிலையத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் தொடா்பாக மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வள்ளியூரில் பேருந்துநிலைய கட்டங்கள் இடிக்கப்பட்டு ரூ.15 கோடி செலவில் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வள்ளியூா் பேருந்துநிலையத்தில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான வரைபடம் நகர திட்டமிடல் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இடிக்கப்பட்டுள்ள வள்ளியூா் பேருந்து நிலைய இடத்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

மாவட்ட வருவாய் அலுவலருடன், ராதாபுரம் வட்டாட்சியா் வள்ளிநாயகம், திமுக மாவட்ட துணைச் செயலா் வெ. நம்பி, பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT