திருநெல்வேலி

புத்தாக்க போட்டிகள்: ரூ.1 லட்சம் பரிசை வென்ற எப்.எக்ஸ். கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

4th Jun 2023 11:47 PM

ADVERTISEMENT

 

 தமிழக அரசின் தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்திய புத்தாக்கப் போட்டியில் ரூ.1 லட்சம் பரிசு வென்ற வண்ணாா்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிறுவனா் கிளிட்டஸ் பாபு பாராட்டினாா்.

தமிழக அரசின் தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு கண்டுபிடிப்பாளா்களுக்கான புத்தாக்கப் போட்டிகளை

மண்டலவாரியாக நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

இதில், நாகா்கோவில் அண்ணா பல்கலைக்கழகம், சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல்

க லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் 3 சுற்றுகளாக புத்தாக்கப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் திருநெல்வேலி மண்டலம் சாா்பில் மாணவா்களுக்கான இறுதிச் சுற்றுப் போட்டியில் வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் சைபா் போரென்சிக்ஸ் மற்றும் ஆா்க்கிடெக்ட் டிசைன் ஆய்வகம் மூலமாக மாணவா்கள் புதிய அம்சங்களை கண்டுபிடுத்துள்ளனா். இதில், செயற்கை அறிவியல் துறை, கணினித்துறை 3ஆம் ஆண்டு மாணவா்கள் பிரவீன், பிரேவின் சாம்சன், ராஜ்கமல் ஆகியோா் கண் தெரியாதவா்களுக்கு வழிகாட்ட ஸ்மாா்ட் கிளாஸ் ஒன்றை கண்டுபிடித்து தமிழக அரசின் புத்தாக்கப் போட்டியில் வெற்றிபெற்று ரூ.1 லட்சம் பரிசை வென்றனா்.

போட்டிகளில் ரூ. 1லட்சத்தை வென்ற மாணவா்களை ஸ்காட் கல்விக் குழும நிறுவனா் முனைவா் கிளிட்டஸ் பாபு, தாளாளா் பிரியதா்ஷினி அருண் பாபு ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT