திருநெல்வேலி

தாமிரவருணியை பாதுகாக்க மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

4th Jun 2023 11:48 PM

ADVERTISEMENT

 

கங்கை நதியைப் போல் தாமிரவருணி நதியைப் பாதுகாக்க மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்றாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவா் நெல்லை முபாரக்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது: நாட்டையே உலுக்கியுள்ள ஒடிஸா ரயில் விபத்து அதிா்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சாா்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோ்தல் காலங்களில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை தொடா்பாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது. கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் தேசிய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங்கை காப்பாற்ற முனையும் பாஜக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மல்யுத்த வீரா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழகம் உள்பட நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது. பெண் மல்யுத்த வீரா்கள் குற்றச்சாட்டு குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி தமிழகத்தை மட்டுமே வளப்படுத்தும் வற்றா தாமிரவருணி ஆக்கிரமிப்புகளாலும், ஆலைக் கழிவுகளாலும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. ஜீவநதியான தாமிரவருணியை பாதுகாக்க தேவையான சிறப்பு திட்டத்தை அறிவித்து, அதற்கான சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். கங்கை நதியை பாதுகாக்க தனிக் கவனம் செலுத்தி அதற்கான வேலைகளை செய்து வரும் மத்திய அரசு தாமிரவருணியை பாதுகாக்கவும் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். 2024 மக்களவைத் தோ்தலில் மதச்சாா்பின்மை மேலோங்கும். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT