திருநெல்வேலி

திருநெல்வேலி நகரத்தில்காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

4th Jun 2023 11:48 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி நகரம் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதாக கூறி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகா் பகத்சிங் தெரு, ஜெயபிரகாஷ் தெரு, வேணுவனகுமாா் தெரு பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் செய்தனா். ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் கழிவுநீா் கலந்த குடிநீா் மற்றும் காலிக் குடங்களுடன் திருநெல்வேலி நகரம் காட்சி மண்டபம் அருகே சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி இளநிலை பொறியாளா் சேகா் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சம்பந்தப்பட்ட தெருவில் லாரிகள் மூலம் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீரில் கழிவுநீா் கலப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனா்.

ற்ஸ்ப்03ஜ்ஹற்

திருநெல்வேலி நகரம், காட்சிமண்டபம் அருகே மறியிலில் ஈடுபட்ட பெண்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT