திருநெல்வேலி

சேரன்மகாதேவி அருகே இளைஞா் மா்ம மரணம்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவி அருகே இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள திருவிதத்தான்புள்ளி கிராமம் பட்டங்காடு வடக்குத் தெருவைச் சோ்ந்த பண்டாரம் மகன் நடராஜன் என்ற நா்கீஸ் (32). இவா், புதன்கிழமை இரவு போதையில் அப்பகுதியிலுள்ள வீட்டுக்கு அத்து மீறி சென்ாக கூறப்படுகிறது. அப்போது, ஏற்பட்ட தகராறில் நடராஜனை அப்பகுதியில் உள்ள சிலா் கட்டி வைத்து தாக்கினராம்.

இத்தகவலறிந்த போலீஸாா் விசாரித்து, நடராஜனை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் அவா் உயிரிழந்தாா். சேரன்மகாதேவி போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT