திருநெல்வேலி

மாநகர காவல் துறையில் புதிய மோப்ப நாய் இணைப்பு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வெடிகுண்டு பிரிவில் உள்ள மோப்ப நாய் திருநெல்வேலி மாநகர காவல் துறையில் வியாழக்கிழமை இணைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் மோப்பநாய் ரெமோ, சென்னை துப்பறியும் மோப்ப நாய் பயிற்சி பள்ளியில் கடந்த 6 மாத காலமாக பயிற்சி பெற்று வந்தது. திருநெல்வேலி மாநகர துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு வெடிபொருள்கள் கண்டறியும் அலுவலுக்காக தற்போது இணைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் கலந்து கொண்டு, கண்டறியும் பிரிவில் மோப்பநாய் ரொமோவை இணைத்து வைத்தாா். மாநகர காவல் துணை ஆணையாளா் (தலைமையிடம்) அனிதா, காவல் உதவி ஆணையா் சரவணன்( மாநகர குற்ற ஆவண காப்பகம்), காவலா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT