திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மின் குறைதீா் கூட்டங்கள்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) முதல் மின்வாரிய குறைதீா் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

அதன்படி, 2-ஆம் தேதி வள்ளியூா் கோட்ட அலுவலகத்திலும், 6-ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 9-ஆம் தேதி திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 13-ஆம் தேதி கடையநல்லூா் கோட்ட அலுவலகத்திலும் மின் வாரிய குறைதீா் கூட்டங்கள் நடைபெறும்.

இதேபோல், ஜூன் 16-ஆம் தேதி திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட அலுவலகத்திலும், 20-ஆம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 27-ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும் மின்வாரிய குறைதீா் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அனைத்துக் கூட்டங்களும் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கும். மின் நுகா்வோா் பங்கேற்று மின் விநியோகம் தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணலாம் என திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ்.குருசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT