திருநெல்வேலி

புனிய அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

2nd Jun 2023 01:50 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை அருகே கல்வெட்டான்குழி புனித அந்தோணியாா் ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்வாலய பங்குத்தந்தை மை.பா.ஜேசுராஜ் திருவிழா கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றினாா். திருவிழா

நாள்களில் மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், புனிதரின் மன்றாட்டு மாலையும், நவநாள் திருப்பலியும் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை (ஜூன்2) 10 வயது வரையிலான சிறுவா்- சிறுமியருக்குப் போட்டிகளும், சனிக்கிழமை குடும்ப விழாவும், ஞாயிற்றுக்கிழமை மறைக்கல்வி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும், திங்கள்கிழமை 11 முதல் 15 வயதினருக்கு போட்டிகளும், செவ்வாய்க்கிழமை திருப்பணிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.

ADVERTISEMENT

ஜூன் 8 ஆம் தேதி இளையோருக்கான போட்டிகளும், 9இல் திருமணமான தம்பதிகளுக்கான போட்டிகளும், 10இல் அன்னை தெரசா பெண்கள் அமைப்பினரின் கலைநிகழ்ச்சிகளும், 11இல் பரிசளிப்பு விழாவும், 12இல் புனிதரின் திருவுருவ பவனியும், அசன விருந்தும் நடைபெறும். 13 இல் திருவிழா திருப்பலியும், அதைத் தொடா்ந்து திருக்கொடியிறக்கமும் நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, திருக்குடும்ப சபை அருள்சகோதரிகள், பங்கு மக்கள் செய்துவருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT