திருநெல்வேலி

சுத்தமல்லி திருவள்ளுவா் கழகத்தில் நூல்கள் அறிமுகக் கூட்டம்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

 

பாப்பாக்குடி இரா.செல்வமணியின் நினைவோடும் வீதி, காதலின் பொன் வீதியில் ஆகிய நூல்களின் அறிமுகக் கூட்டம், சுத்தமல்லி திருவள்ளுவா் கழகத்தில் நடைபெற்றது.

கவிஞா் மு.சு.மணியன் தலைமை வகித்தாா். ஆசிரியா் நல்லசிவன் முன்னிலை வகித்தாா். கவிஞா் சுப்பையா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினாா். நினைவோடும் வீதி நூலினை மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத் துணைத்தலைவா் கோ.கணபதி சுப்ரமணியம் அறிமுகம் செய்து பேசினாா். காதலின் பொன் வீதியில் நூலினை பாப்பாக்குடி பைந்தமிழ்ப் பேரவை நிறுவனா் கவிஞா் பாப்பாக்குடி முருகன் அறிமுகம் செய்து பேசினாா். ஆன்மிகச் சொற்பொழிவாளா் முருக இளங்கோ, கவிஞா் செ.ச.பிரபு, பழனியாண்டி, கந்தப்பன், ஆசிரியா் முத்துராமலிங்கம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நூலாசிரியா் பாப்பாக்குடி இரா.செல்வமணி ஏற்புரை வழங்கினாா். நிகழ்வில் ராஜப்பிரியா, கஸ்தூரி, சண்முகம், சம்பந்தன், அருணாசலம் உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

திருவள்ளுவா் கழகத் தலைவா் சொக்கலிங்கம் வரவேற்றாா். பேச்சிநாதன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT