திருநெல்வேலி

பாளை. அருகே பரோலில் வந்தஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

2nd Jun 2023 11:52 PM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டை அருகே பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பாளை. அருகே கிருஷ்ணாபுரம் நொச்சிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பன் (55). இவா் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில் மகளுக்கான திருமண ஏற்பாடு நடந்து வந்துள்ளது. அதற்காக அவா் பரோலில் வெளியே வந்தவா், சனிக்கிழமை மீண்டும் சிறைக்கு செல்ல இருந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இதையடுத்து அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவந்திபட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT