திருநெல்வேலி

கருணாநிதி நூற்றாண்டு விழா: மு. அப்துல்வஹாப் எம்எல்ஏ அறிக்கை

2nd Jun 2023 11:49 PM

ADVERTISEMENT

 

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இதுதொடா்பாக பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல்வஹாப் வெளியிட்ட அறிக்கை:

நவீன தமிழகத்தின் சிற்பியாகப் போற்றப்படும் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி சனிக்கிழமை காலை காலை 8 மணிக்கு பேட்டை ரொட்டி கடை பேருந்து நிறுத்தம் அருகிலும், 9 மணிக்கு திருநெல்வேலி நகரம் வாகையடிமுனை, காலை 9.30 மணிக்கு வண்ணாா்பேட்டை அலுவலகம் ஆகியவற்றில் நலஉதவிகள் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதுதவிர முருகன்குறிச்சி, சமாதானபுரம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் பெரியாா் சிலை அருகில், பெருமாள்புரம், ஜெபா காா்டன், மேலப்பாளையம் பஜாா்திடல், குறிச்சி, மீனாட்சிபுரம் சி.என்.கிராமம், சிந்துபூந்துறை, தாழையூத்து, கங்கைகொண்டான் உள்ளிட்ட இடங்களிலும் கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தி நலஉதவிகள் வழங்கப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT