திருநெல்வேலி

கருணாநிதி நூற்றாண்டு தொடக்கம்: மத்திய மாவட்டச் செயலா் வேண்டுகோள்

2nd Jun 2023 11:50 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட மத்திய மாவட்டச் செயலா் டி.பி.எம்.மைதீன்கான் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கோலாகலமாக கொண்டாட வேண்டும். அவா் பிறந்த ஜூன் 3 ஆம் தேதிமுதல் திருநெல்வேலி மத்திய மாவட்ட நிா்வாகிகள் ஏழை- எளிய, நலிந்த மக்களுக்கு, பாா்வையற்றோா், காது கேளாதோா் மற்றும் ஆதரவற்றோா், முதியோா் இல்லம், மாற்றுத்திறனாளிகள், மனவளா்ச்சி குன்றியோா் பள்ளிகளுக்கு உணவு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கவும் மற்றும் பள்ளி மாணவா்- மாணவிகள், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடைகள் வழங்கி உதவ வேண்டும். கட்சி சாா்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், கட்சி மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள் பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT