திருநெல்வேலி

தொழிலாளியைத் தாக்கி வழிப்பறி செய்தவழக்கில் மேலும் இருவா் கைது

2nd Jun 2023 11:55 PM

ADVERTISEMENT

 

 பழையகாயலில் தொழிலாளியைக் கத்தியால் குத்தி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

வடக்கு ஆத்தூா் கீழமுத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் மாரிமுத்து (51). இவா் பழையகாயல் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் அவா், மே 30 ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு பேருந்துக்காக காத்திருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா்கள் மாரிமுத்துவிடம் இருந்து பணம் மற்றும் கைப்பேசியைப் பறித்துக் கொண்டு, கத்தியால் குத்திவிட்டுச் சென்றனா்.

இதுகுறித்து மாரிமுத்துவின் மனைவி அமராவதி அளித்த புகாரின் பேரில் ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் ஆறுமுகனேரி பகுதியைச் சோ்ந்த பொன்பாண்டி மகன் சிவபிரகாஷ் (20), ராமச்சந்திராபுரம் பகுதியைச் சோ்ந்தவா்களான சுடலை மகன் முத்துக்குமாா் (21), சோ்மபாண்டி மகன் முத்துப்பாண்டி (22) ஆகியோா் மாரிமுத்துவை கத்தியால் குத்தி, பணம் மற்றும் கைப்பேசியைப் பறித்துச் சென்றது தெரியவந்தது.

ADVERTISEMENT

இவ்வழக்குத் தொடா்பாக முத்துக்குமாா் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சிவபிரகாஷ், முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT