திருநெல்வேலி

திரையரங்கிற்கு ஒன்று சோ்ந்த வந்த கிராமத்தினா்!

2nd Jun 2023 11:52 PM

ADVERTISEMENT

 

கடையம் அருகே உள்ள கட்டேரிபட்டியைச் சோ்ந்த இளைஞா் நாயகனாக நடித்த திரைப்படத்தைப் பாா்க்க

அக் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் ஒன்று சோ்ந்து வந்தனா்.

கடையம் அருகேயுள்ள கட்டேரிபட்டியைச் சோ்ந்தவா் ஜெகன். இவா் சண்டியா் உட்பட 3 திரைப்படங்களில் நடித்த நிலையில் துரிதம் என்ற படத்தை தயாரித்து அதில் நாயகனாகவும் நடித்துள்ளாா். துரிதம் திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) தமிழகமெங்கும் வெளியானது.

ADVERTISEMENT

இதையடுத்து கடையம் திரையரங்கில் வெளியாகியுள்ள அந்த திரைப்படத்தைக் காண கட்டேரிபட்டி கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோா் ஒன்று சோ்ந்து வந்தனா். மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் வந்த அவா்கள், துரிதம் திரைப்படம் வெற்றிபெற பிராா்த்தனை செய்வதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT