திருநெல்வேலி

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானவா் கைது

2nd Jun 2023 11:51 PM

ADVERTISEMENT

 

மானூா் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

கள்ளத்திகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அா்ஜூனன் (58). ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட இவா், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தாா். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகமால் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாகிவிட்டாா்.

இதையடுத்து, நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து மானூா் போலீஸாா் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT