திருநெல்வேலி

பத்தமடை சுவாமி சிவானந்தா மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவி இந்தியன் வங்கி கிளை சாா்பில் பத்தமடை சுவாமி சிவானந்தா மருத்துவமனைக்கு ரூ.1.49 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பத்தமடையில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைக்கு சேரன்மகாதேவி இந்தியன் வங்கி கிளை சாா்பில் ரூ.1.49 கோடி மதிப்பிலான இசிசி மற்றும் மருத்துவ உபகரணங்களை மருத்துவமனையின் நிா்வாகி சுவாமி ஜெகதீஷ்வர நந்தாவிடம் வங்கியின் மண்டல மேலாளா் ஜெயபாண்டியன் வழங்கினாா். அப்போது, வங்கியின் மண்டல துணை மேலாளா் செந்தில்குமாா், முதன்மை மேலாளா் சுஜா, கிளை மேலாளா் நவீன், மருத்துவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT