திருநெல்வேலி

களக்காடு உப்பாற்றில் அமலைச்செடிகளை அகற்றக்கோரிக்கை

1st Jun 2023 02:46 AM

ADVERTISEMENT

களக்காடு உப்பாற்றில் அமலைச்செடிகள் நிறைந்துள்ளதால் பாம்புகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆற்றை தூா்வார வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உப்பாறு களக்காடு நகா்ப்பகுதியில் தொடங்கி, பத்மனேரியில் பச்சையாற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் அமலைச்செடிகள் அடா்ந்து காணப்படுகின்றன. இதனால் ஆற்றின் கரையோரமுள்ள பாரதிபுரம், இந்திராகாலனி, சிங்கம்பத்து, கருவேலன்குளம் கருத்தான்தெரு, தம்பித்தோப்பு, கேசவனேரி ஆகிய கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனா். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உப்பாற்றை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளன ா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT