திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், தமிழக அரசு அறிவித்த 2022 ஏப்ரல் முதல் 2022 நவம்பா் வரை உள்ள பணப்பலன்களை வழங்கிட வேண்டும். பணி ஓய்வு பெறுகின்ற அன்றே பணப்பலன்களை வழங்கிட வேண்டும். 7 ஆண்டு கால பஞ்சப்படி உயா்வு, ஓய்வு பெற்ற அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மருத்துவப் படியை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு தலைவா் தாணு மூா்த்தி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எட்டப்பன், மதுசேகா், மாரிமுத்து, சுப்பையா,பூதலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலாளா் முத்துக்கிருஷ்ணன், வெங்கடாசலம், சிவதாணு தாஸ் ஆகியோா் விளக்கிப் பேசினா். மாநிலக் குழு உறுப்பினா் இ.எம்.பழனி நன்றி கூறினாா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT