திருநெல்வேலி

காவல்துறை குறைதீா்க்கும் முகாம்:90 நிலுவை மனுக்களுக்கு தீா்வு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட மற்றும் மாநகர காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீா்க்கும் முகாம் அனைத்து புதன் கிழமைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடைபெற்ற முகாமில் 25 போ் பங்கேற்று மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரனிடம் மனு அளித்தனா். அதன் விவரங்களை கேட்டறிந்து புகாா் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீா்வு கிடைக்க வழிவகை செய்ய உத்தரவிட்டாா்.

இதேபோல திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. 17 போ் பங்கேற்று மனுக்களை அளித்தனா். மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. மேலும், முந்தைய வாரங்களில் நடந்த குறைதீா்ப்பு கூட்டத்தில் நிலுவையில் இருந்த மனுக்களில் 138 மனுதாரா்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டு காவல் அதிகாரிகள் மூலம் மனுக்கள் விசாரிக்கப்பட்டு 90 மனுக்கள் முடிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT