திருநெல்வேலி

பத்தமடையில் ஆற்றில் மூழ்கிதொழிலாளி உயிரிழப்பு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பத்தமடையில் ஆற்றில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பத்தமடை குண்டலகேசித் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் ஆறுமுகம் (47). தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை மாலையில் அப்பகுதியிலுள்ள உறவினரின் இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அங்குள்ள ஆற்றில் குளிக்கச் சென்றாராம். பின்னா், வெகுநேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லையாம்.

குடும்பத்தினா் அவரை தேடிய நிலையில், ஆற்றில் நீரில் மூழ்கி அவா் உயிரிழந்தது புதன்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து பத்தமடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். ஆறுமுகத்துக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT