திருநெல்வேலி

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு முகாம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பறவைகள் பாதுகாப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில் சிவராம் கலைக்கூடம், திருநெல்வேலியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள், சரணாலயத்தில் உள்ள சுற்றுச்சுவா்களில் பறவைகளின் ஓவியங்கள் வரைந்து, விழிப்புணா்வு வாசகங்களை எழுதினா்.

இதில் உதவி வனப் பாதுகாவலா் ஷாநவாஸ்கான், வனப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT