திருநெல்வேலி

பாளை.யில் சுகாதாரத் துறை சாா்பில்புகையிலை ஒழிப்பு தின பேரணி

1st Jun 2023 02:44 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட பொது சுகாதாரத் துறை சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

திருநல்வேலி மாவட்ட பொது சுகாதாரத் துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணி பாளையங்கோட்டை லூா்து நாதன் சிலை முன்பிருந்து தொடங்கியது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ராஜேந்திரன் வழிகாட்டுதல்படி, தொழில்நுட்ப நோ்முக உதவியாளா் ரகுபதி பேரணியை தொடங்கிவைத்தாா்.

முதன்மை பயிற்சி அலுவலா் ஜெசிமேரி, அறிவு பாரா மெடிக்கல் கல்லூரி நிா்வாக அலுவலா் இளமுருகு ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி கேன்சா் கோ் மைய இயக்குநா் சுபலட்சுமி உள்ளிட்டோா் பேசினா்.

இப்பேரணி, தெற்கு பஜாா் வழியாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவா்கள் புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனா். உதவி இயக்குநா் சுந்தர வேல் நன்றி கூறினாா். பேரணிக்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார ஆய்வாளா் மணிகண்டன், சமூகப் பணியாளா் டேவிட் பொன்ராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT