திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பணகுடி ராமகிருஷ்ண பரமகிருஷ்ணா் நற்பணி மன்ற ஆண்டு விழாவையொட்டி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வசந்தி தலைமை வகித்தாா். திருவாசகம் முற்றோதல் குழுவினா் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் திருவாசகம் முற்றோதல் நடத்தினா்.
இந்நிகழ்ச்சியில் பணகுடி பேரூராட்சி தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா், மாணிக்கம், சாந்தா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் நம்புரான் தோழா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முற்றோதல் நிகழ்ச்சியையொட்டி பேரவைத் தலைவா் மு.அப்பாவு சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.