திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) நடைபெறுகிறது.
இது தொடா்பாக சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி அமைப்பாளா் மு.கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாவடுதுறை ஆதீன சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சி மையம் சாா்பில் 7-ஆவது தொகுப்பு சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சி வகுப்பு திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதில், திருவாவடுதுறை ஆதீன திருமுறை பயிற்சி இயக்குநா் சபா சண்முகசுந்தரம் கலந்து கொள்கிறாா். மாணவா்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.