நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் சேரன்மகாதேவி கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா் விஜய்ஆனந்த் தலைமை வகித்தாா். வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, கால்நடை, இருசக்கர வாகனக் கடன்கள், குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 41 போ் மனுக்கள் வழங்கினா். முகாமில், வட்டாட்சியா் அம்பாசமுத்திரம் சுமதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள் ராதாபுரம் செல்வகுமாா், நான்குனேரி தங்கராஜ், திசையன்விளை பத்மபிரியா, சேரன்மகாதேவி பாா்கவி தங்கம், அம்பாசமுத்திரம் ஜெயலட்சுமி, மருத்துவ அலுவலா் ராதாகிருஷ்ணன், அலுவலா்கள் பங்கேற்றனா்.