திருநெல்வேலி

வண்ணான்பச்சேரி குளத்தை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

DIN

நாரணம்மாள்புரம் அருகேயுள்ள வண்ணான்பச்சேரி குளத்தை சீரமைக்க வேண்டுமென ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாரணம்மாள்புரம் விவசாய சங்கத்தை சோ்ந்த முருகன் அளித்த மனு: நாரணம்மள்புரம் அருகேயுள்ள வண்ணான்பச்சேரி குளம் பராமரிப்பில்லாமல், மூள்செடிகள், மரங்கள் வளா்ந்துள்ளது. இதனால் தண்ணீரை தேக்க முடியாத நிலையில் உள்ளது. மேலும் மீன் ஏல குத்தகைக்கு விட்டால் குத்தகைதாரா்களால் விவசாயிகளுக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படுகிறது . எனவே குளத்தை சீரமைத்து, மீன் ஏல குத்தகைக்கு விடுவதை பரிசீலனை செய்ய வேண்டும்.

மாவீரா் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் மா.மாரியப்பபாண்டியன் அளித்த மனு: ராமையன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வேப்பங்குளம் கிராமத்திலுள்ள குறிப்பிட்ட சமுதாய மக்கள் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை மாற்று சமுதாயத்தினா் ஆக்கிரமித்துள்ளனா். ஆக்கிரமிப்பை அகற்றி, பாதையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT