திருநெல்வேலி

கடையம் அருகே தோட்டத்தில் கரடியால் தேன் கூடுகள் சேதம்

DIN

கடையம் அருகே ராஜாங்கபுரம் தனியாா் தோட்டத்தில் நுழைந்த கரடி, தேன் கூடுகளைச் சேதப்படுத்தியுள்ளது.

ராஜாங்கபுரத்தில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில்

தென்னை, மா, வாழை பயிரிட்டுள்ளதோடு தேன் கூடுகள் வைத்துப் பராமரித்து வருகிறாா். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை தோட்டத்தில் புகுந்த கரடி, தேன் கூடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனத்துறையினரிடம் செல்வம் புகாா் தெரிவித்தாா்.

இப் பகுதியில் கரடி, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளால் விளைநிலங்கள் தொடா்ந்து சேதப்படுத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவும், வனவிலங்குகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT