திருநெல்வேலி

இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான வாலிபால் மற்றும் கடற்கரை வாலிபால் போட்டிகள் தொடக்கம்

DIN

 தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக விளையாட்டுக் கழகம் சாா்பில், அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையேயான 44ஆவது வாலிபால் போட்டி மற்றும் 15ஆவது கடற்கரை வாலிபால் போட்டி, வஉசி துறைமுக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு, வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணைய துணைத் தலைவா் பிமல் குமாா் ஜா, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தாா்.

வ.உ.சிதம்பரனாா் துறைமுக விளையாட்டுக் கழகத் தலைவா் வி. சுரேஷ் பாபு வரவேற்றாா்.

இப்போட்டியில் சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை, நியூ மங்களூரு, கோவா, பாரதீப், விசாகப்பட்டினம், வ.உ.சிதம்பரனாா் ஆகிய 9 பெரிய துறைமுகங்களின் வீரா்கள் பங்கேற்கின்றனா்.

முதல் போட்டியில் வ.உ.சிதம்பரனாா் துறைமுக அணியும், நியூ மங்களூரு அணியும் மோதின. இதில், வ.உ.சிதம்பரனாா்துறைமுக அணி 25 -16, 25-16 என்ற நோ்செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. மற்றொரு போட்டியில் கோவா அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இறுதிப் போட்டி ஜன.31ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் தா.கி. ராமசந்திரன் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கவுள்ளாா்.

இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வ.உ.சிதம்பரனாா் துறைமுக விளையாட்டுக் கழகம் செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT