திருநெல்வேலி

தனித்தமிழ் இலக்கியக் கழக போட்டிகளில் மாணவா்கள் சிறப்பிடம்

30th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகம் சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களின் பெயா்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக அந்தக் கழகத்தின் தலைவா் பேராசிரியா் பா.வளன்அரசு வெளிட்ட அறிக்கை:

திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகத்தின் பேச்சுப் போட்டியில் ஸ்காட் கல்வியியல் கல்லூரி மாணவா் பொ.முத்தரசன் முதலிடம் பெற்றுள்ளாா். ராணி அண்ணா கல்லூரி மாணவி செ.குட்டிஸ்ரீ இரண்டாமிடமும், தெற்குக்கள்ளிகுளம் தெ.மா.நா.சங்க கல்லூரி மாணவா் இரா.கோபாலகிருஷ்ணன் மூன்றாமிடமும் பிடித்துள்ளனா்.

கட்டுரைப் போட்டியில், பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி மாணவி ரேவதி கண்ணம்மாள் முதலிடமும், பேட்டை மதிதா இந்துக் கல்லூரி மாணவி எமியும், திருத்தங்கல் கல்லூரி மாணவி சொ.ஜெயஸ்ரீயும் மூன்றாமிடம் பிடித்தனா்.

ADVERTISEMENT

இவா்களுக்கான சுழற்கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் பிப்ரவரி 4 ஆம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் வைத்து நடைபெறும் தமிழறிஞா் ச.வே.சுப்பிரமணியன் திருவிழா மற்றும் பரிசளிப்பு விழாவில் வழங்கப்படவுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT