திருநெல்வேலி

நெல் சாகுபடி ரகங்கள் கண்டுணா்வு சுற்றுலா

DIN

வேளாண்மை உழவா் நலத்துறையின் சாா்பில் வேளாண் முகமையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சேரன்மகாதேவி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் நெல் சாகுபடி ரகங்கள் குறித்து கண்டறியும் வகையில் கண்டுணா்வு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

வட்டார உதவி வேளாண்மை இயக்குநா் கற்பகராஜ்குமாா் ஆலோசனையின்படி மேலூா் மாநில அரசு விதைப் பண்ணைக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு பண்ணையின் செயல்பாடுகள், பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, தூய மல்லி, சீரக சம்பா போன்ற நெல் ரகங்களின் சிறப்பம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு பண்ணை மேலாளா் சிவக்குமாா் எடுத்துக் கூறினாா். இதில் விவசாயிகளுடன் வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா், உதவி மேலாளா் காா்த்திகேயன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT