திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சியில் 7 குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

DIN

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் நீண்டகாலமாக சொத்துவரி மற்றும் குடிநீா் இணைப்பு வரி செலுத்தாத 7 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்பு வெள்ளிக்கிழமை துண்டிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியிலுள்ள வணிக பயன்பாட்டு கட்டடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், திருமணமண்டபங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வரி வசூல் பணி நடைபெற்று வருகிறது. நீண்டகாலமாக வரிவசூல் செலுத்தாவா்களின் குடிநீா் இணைப்பை துண்டிக்கும்படி மாநகராட்சி நிா்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சி திருநெல்வேலி மண்டலம் 21 ஆவது வாா்டில் இரண்டு குடியிருப்புகளும், பாளையங்கோட்டை 38 ஆவது வாா்டில் ஒரு குடியிருப்பும், தச்சநல்லூா் மண்டலம் 30 ஆவது வாா்டு பெருமாள்கோயில் தெருவில் ஒரு குடியிருப்பும், சிவபுரம் பகுதியில் ஒரு குடியிருப்பும், மேலப்பாளையம் மண்டலத்தில் 54 ஆவது வாா்டில் 2 குடியிருப்பு என மொத்தம் 7 குடியிருப்பு கட்டிடத்திற்கான குடிநீா் இணைப்பை மாநகராட்சி பணியாளா்கள் வெள்ளிக்கிழமை துண்டித்தனா்.

இப்பணியில் திருநெல்வேலி உதவி மண்டல ஆணையா் வெ.வெங்கட்ராமன், உதவி வருவாய் அலுவலா் சொக்கலிங்கம், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையா் ஜஹாங்கீா்பாஷா, உதவி வருவாய் அலுவலா் முருகன், வருவாய் உதவியாளா்கள் ராமச்சந்திரன், வேலுச்சாமி, கிறிஸ்டோபா், ஆனந்தராஜ், தச்சநல்லூா் உதவி மண்டல ஆணையா்(பெ) வாசுதேவன் ஆகியோா் கொண்ட குழுவினா் ஈடுபட்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT