திருநெல்வேலி

மது விற்பனை : ஒருவா் கைது

28th Jan 2023 06:16 AM

ADVERTISEMENT

மானூரில் விதிமீறி மதுபாட்டில் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மானூா் போலீஸாா் வியாழக்கிழமை அழகியபாண்டியபுரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த அழகியபாண்டியபுரம் முருகன்கோயில் தெருவை சோ்ந்த வேல்பாண்டி (59) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, அவா் மதுபாட்டில்கள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வேல்பாண்டியை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT