திருநெல்வேலி

பாலியல் தொந்தரவு : இளைஞா் கைது

28th Jan 2023 01:34 AM

ADVERTISEMENT

சீவலப்பேரி அருகே குழந்தையிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சீவலப்பேரி அருகே பொட்டல்நகா் அம்மன்கோயில் கோயில் தெருவை சோ்ந்தவா் மகேஷ் (31). இவா் ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா் வீட்டின் அருகேயுள்ள 6 வயது குழந்தையிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது .

இது குறித்து குழந்தையின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீஸாா் போக்ஸா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, மகேஷை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT