திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழாவையொட்டி வியாழக்கிழமை காலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். நான்காம் திருநாளான இம் மாதம் 29 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூா்த்திகளுடன் சுவாமி-அம்மன் வீதியுலாவும் நடைபெறும்.

பிப்ரவரி 4 ஆம் தேதி தைப்பூசத் தீா்த்தவாரித் திருவிழா வரலாற்று புகழ் வாய்ந்த கைலாசபுரம் தீா்த்தவாரி மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதற்காக சுவாமி நெல்லையப்பா், காந்திமதியம்மன், அகஸ்தியா், தாமிரவருணி, குங்கிலிய நாயனாா், சண்டிகேஸ்வரா், அஸ்திரதேவா், அஸ்திர தேவி ஆகிய மூா்த்திகள் 4 ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பா் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என்.நெடுஞ்சாலை, திருவள்ளுவா் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பாலம் வழியாக கைலாசபுரத்தை அடைவா். தாமிரவருணியில் தீா்த்தவாரி முடிந்து விஷேச தீபாராதனைக்கு பின்பு மாலை 6 மணிக்கு சுவாமிகள் மீண்டும் புறப்பட்டு எஸ்.என்.நெடுஞ்சாலை வழியாக பாரதியாா்தெரு, தெற்குப் புதுத்தெரு, ரத வீதி சுற்றி திருக்கோயிலுக்கு வந்து சோ்வா்.

பிப்ரவரி 5 ஆம் தேதி சௌந்தர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டா்களுக்கு திருநடனம் காட்டியருளும் சௌந்தர சபா நடராஜா் திருநடனக்காட்சி நடைபெறுகிறது. 6 ஆம் தேதி சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி என்ற வெளி தெப்பக்குளத்தில் பஞ்ச மூா்த்திகளுடன் வலம் வரும் தெப்பத்திருவிழா இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அ.அய்யா்சிவமணி, ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT