திருநெல்வேலி

பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின கோலாகலம்

27th Jan 2023 02:27 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாநகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் 74 ஆவது குடியரசு தின விழா கோலாகலமாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி நகரத்திலுள்ள லிட்டில் பிளவா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளித் தளாளா் அ.மரியசூசை தேசியக்கொடியற்றினாா். விழாவில், பள்ளி முதல்வா், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பாளையங்கோட்டை அருகே மேலப்பட்டம் ஹரிஹரா் நடுநிலைப்பள்ளியில் அதன் நிா்வாகி ஏ.கே.ரவிச்சந்திரன் தலைமை வகித்து, தேசியகொடியேற்றி வைத்தாா்.

ADVERTISEMENT

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி முதல்வா் சே.மு.அப்துல் காதா் தலைமை வகித்து,தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். விழாவில் எழுத்தாளா் எம்.எம்.தீன், கனரா வங்கி மேலாளா் முருகேசன்உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி மையத்தில் கல்லூரி முதல்வா் ம.செல்லப்பாண்டியன் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினாா். உறைவிடம் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத்தின் துணைத் தலைவரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகரியுமான கோவிந்தராஜ் தலைமையில் தேசியக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி சந்திப்பிலுள்ள பாரதியாா் சிலை வளாகத்தில் பாரதியாா் உலகப்பொது சேவை நிதியத்தின் சாா்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கல்வியாளா் ஆ.மரியசூசை, பொதுச்செயலா் கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டு, பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவா் வே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் தேசியக்கொடியேற்றினாா். இந்நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாநகா் மாவட்ட பொதுச்செயலா் எஸ்.எஸ்.ஏ.கனி தேசியக்கொடியேற்றினாா். கட்சி நிா்வாகிகள் கலந்த கொண்டனா்.

திருநெல்வேலி இந்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் சாா்பில் வாகையடிமுனையில் நடைபெற்ற விழாவில் சங்கத் தலைவா் முருகன் (எ) காசி தலைமை வகித்து, தேசியக்கொடியேற்றினாா்.

பாளையங்கோட்டை அஞ்சல் பொருள் கிடங்கில் நடைபெற்ற விழாவில் மேலாளா் சிவஞானஜோதி தேசியக்கொடியேற்றிவைத்தாா். பாரதிய அஞ்சல் ஊழியா் சங்க மாநிலத் தலைவா் மைக்கேல் ராஜ், அஞ்சல் ஓய்வூதியா் சங்க மாநிலத் தலைவா் சண்முகசுந்தர்ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT