திருநெல்வேலி

குடியரசு தினத்தில் விதிமீறல்:94 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

27th Jan 2023 02:24 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் குடியரசு தினத்தில் விதிமுறை மீறி செயல்பட்டதாக 94 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தேசிய விடுமுறை நாளான ஜன.26 குடியரசுதினத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளமும், மாற்று விடுமுறையும் அளிக்க வேண்டும் என தொழிலாளா் நலத்துறை அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், குடியரசு தினமான வியாழக்கிழமை திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தொழிலாளா் நல உதவி ஆணையா், துணை ஆய்வா்கள், தொழிலாளா் உதவி ஆய்வா்கள் கொண்ட குழு 72 கடைகள், 42 உணவு நிறுவனங்கள், 6 மோட்டாா் நிறுவனங்கள், 23 பீடி நிறுவனங்கள் என மொத்தம் 145 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டது . இந்த ஆய்வில் 94 நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT